புதிய புத்தனின் நிர்வாண நடனம்
பெரிய தோட்ட
அரண்மனையின்
சொகுசுகள்,
வசதிகள், பாதுகாப்புகள்,
அந்தஸ்துகள்
அனைத்தையும்
பார்த்த பின்பு
வெளியேற மறுத்து
விட்டான்
புதிய புத்தன்.
கமிஷன் ஏஜெண்டுகள்
புழங்க,
வஞ்சப் புகழ்ச்சி
பாடும் பச்சோந்திகள் விளங்க
நகை, கரன்சிகள்,
பங்குப் பத்திரங்கள் துலங்க
நள்ளிரவு வேளையில்
தன் பெயரைக்
காப்பாற்றிக் கொள்வதற்கென
நள்ளிரவில்
மட்டும் யாருக்கும் தெரியாமல்
நிர்வாண நடனம்
ஆடிக் கொள்கிறான்.
*****
No comments:
Post a Comment