அழைப்பிதழின் வெளிப்பாடு
தன் மகளின்
பிறந்த நாள் அழைப்பிதழை
அனுப்பியிருந்தாள்
அவள்
அவள் திருமணத்துக்கு
அழைக்காததைப்
பொருட்படுத்த
முடியாது
காதலனே அட்சதைத்
தூவுவதை
அவள் விரும்பாதிருந்திருக்கலாம்
தன் மகளின்
முதலாவது பிறந்த நாளுக்கு
மறக்காது அவள்
அனுப்பியிருக்கும்
அழைப்பிதழ்
மகளைப் போல
நான் அவளை
நேசித்ததன் வெளிப்பாடாக இருக்கலாம்.
அவள் பிரசவித்த
என் பிரியமான
குட்டிக் காதலியைக் காண்பதற்கான
அழைப்பாகவும்
இருக்கலாம்.
*****
No comments:
Post a Comment