25 Oct 2017

கருணை மனு

கருணை மனு
அனுப்புதல்
            தமிழக மக்கள்,
            டெங்கு பாதித்த அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தமிழ்நாடு.
பெறுதல்
            மதிப்பிற்குரிய டெங்கு கொசுக்கள்,
            டெங்குபுரம்,
            தமிழ்நாடு வளாகம்.
ஐயன்மீர்கள்,
            பொருள் -     உயிர் காக்கக் கொரும் கருணை மனுவைத் தயைக் கூர்ந்து                                                   பரிசீலித்தல் சார்பு
            அங்கு இங்கு என்று எங்கும் நிறைந்திருக்கும் டெங்கு கொசுக்கள் அனைவர்க்கும் பணிவான வணக்கங்கள். காலை, மாலை என்று முறை வைத்து கடித்து வைக்கும் தங்களது கடமை மாறாத செயலால் தினம் பத்து என்கிற வீதத்தில் வான்புகழ் கொண்ட தமிழ்நாடு தன் மக்கள் தொகையை வானுலகுக்கு அனுப்பி இழந்து வருகிறது. கொசுவர்த்திச் சுருளுக்கோ, கொசு விரட்டிக்கோ தாங்கள் கட்டுப்பட மறுப்பதால் நாங்கள் அடையும் துயரம் சொல்லொன்னாத் துன்பத்திற்குரியது. தங்களது இச்செயலால் தமிழ்நாடு முழுவதையும் கொசுவலைப் போட்டு மூடுவது என்பது இயலாது காரியம். தயை கூர்ந்து இவ்விண்ணப்பத்தைப் பெற்ற பதினைந்து நாட்களுக்குள் தமிழக மக்களைக் கடிப்பதையோ அல்லது உங்கள் இனத்தைப் பெருக்குவதையோக குறைத்துக் கொள்வதில் ஈடுபட்டு தமிழக மக்களின் உயிர்களுக்கு உயிர்ப் பிச்சைத் தரும் வகையில் இக்கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தங்கள் சமூகத்துக்குப் பணிந்து பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
                                                                                                இப்படிக்கு,
                                                                                    தங்கள் உண்மையுள்ள
                                                            காய்ச்சல் கண்டு காலியாகும் தமிழக மக்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...