மனத்தளைகளுக்கு ஒரு பரிகாரம்
யாரிடமும் அந்தரங்க ஆசைகளைக் கேட்காமல்
இருப்பது ஒரு பக்குவமான மனநிலை. அது ஒரு மடத்தனம் என்று தெரிந்தும் அந்த மடத்தனத்தைப்
பக்குவமற்ற மனநிலை செய்ய வைத்து விடுகிறது.
அந்த ஆசைகள் நிறைவேறுவதால் மனம் இலகு ஆவதாக
மனது நினைத்துக் கொள்கிறது. எந்த ஆசைகள் நிறைவேறிய போதும் மனம் சோர்வாகத்தான் இருக்கும்.
அதற்குக் காரணம் மனத்தளைகளில் சிக்கிக் கொள்ளும் மனம்தான். அதுவே அப்படி ஒரு தோற்றத்தை
ஏற்படுத்துகிறது. ஆனை என்பதே ஒரு மனத்தளைதான்.
மனத்தளைகளே மனச்சோர்விற்குக் காரணம்.
இந்தத் தளைகளிலிருந்து எப்போது வெளிவருகிறோமோ அப்போதே அந்தத் தளைகளும் தகர்ந்து
விடுகிறது.
மனத்தளைகள் அவரவர் உருவாக்கிக் கொள்ளும்
மனப்பான்மைகளாலும், மனோ உலகத்தாலும் ஏற்படுபவைகள். ஒரு எளிய விதி என்னவென்றால் நாமாக
ஏற்படுத்திக் கொண்டவைகள் எவைகளோ, அவைகளை நாமாக அழிக்கவும் முடியும்.
*****
No comments:
Post a Comment