கருணை
துரு பிடிக்காத
கத்தியைச் செருகும்
இவன்
கருணையுள்ள
கொலைகாரன்.
துருபிடித்த
கத்தியைச் செருகும்
அவன்
கருணையற்ற
கொலைகாரன்.
கத்தியால்
குத்தும்
கொலைகாரர்கள்
பெருகி விட்ட
பெரு நகர வீதியில்
நாலு மூலை
முக்கில்
வீற்றிருக்கும்
விநாயகரிடம்
கண்ணீர் மல்க
வேண்டிக் கொள்ளுங்கள்
தக்கன தப்பி
பிழைப்பதற்கு
கருணையுள்ள
கொலைகாரனின் கத்தியில்
குத்துப்படுவதாக
என்று.
*****
No comments:
Post a Comment