முயற்சி - சில கருப்பொருள்கள்
விருப்பமானதைச் செய்யும் போது சலிப்புத்
தட்டாது. சோர்வு தோன்றாது. இதை ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியும் எழாது.
விரும்பாத ஒன்றைச் செய்யும் போது நிலைமை
அப்படியே தலைகீழாக இருக்கும். விரும்பா ஒன்றை நீண்ட காலம் செய்ய முடியாது. அப்படி நீண்ட
காலம் செய்ய முயன்றால் அதுவே மனச்சோர்வுக்குக் காரணமாகி, மனப்பிறழ்வுக்கும் வித்திட்டு
விடும்.
விரும்பாத ஒன்றை விரும்ப வைக்கிறேன் பார்
என்ற பெயரில் அதீத முயற்சியில் ஈடுபட்டு தன்னைத் தானே வெறுக்கும் நிலைக்குச் சென்று
விடக் கூடாது. விரும்பா ஒன்றை விருப்பம் இல்லை என்று விட்டு விடுவது கூட நல்லதே.
எல்லா முயற்சிகளும் நமக்காகத்தான். அந்த
முயற்சிகளுக்காக நாம் அல்ல. அதற்காக நம்மைப் பலியிடுவது என்ற நிலைக்குச் சென்று விடுவது
அல்ல.
எந்த முயற்சியாக இருந்தாலும் மனம் தெளிவாகவும்,
உற்சாகமாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த முயற்சி மனதுக்குப் பிடித்தம் இல்லை
என்றுதான் பொருள். அது போன்ற முயற்சிகளைத் தொடராமல் இருப்பது நல்லது.
*****
No comments:
Post a Comment