அமைதியும் பொறுமையும் அனுதினமும் வேண்டும்!
பயங்கர மன இறுக்கமாக இருக்கும். சூழல்
புரியாமல் அவரவர் பிரச்சனைகளை முன்னிருத்துவார்கள். அதில் நியாய தர்மங்களை வேறு சேர்த்துக்
கொள்வார்கள்.
சுத்தமாகவே அந்தச் சூழல் பிடிக்காது. மனம்
பிடித்து வெளியே தள்ளும். சிறு சிந்தனை கூட அந்த நேரத்தில் நிறைய சக்தியை உறிஞ்சும்.
மனச்சோர்வு கொள்ளச் செய்யும்.
எதுவும் செய்ய முடியாதது போலத் தோன்றும்.
ஆனால், அந்த இடத்தில் சுருண்டு விடக் கூடாது. ஆம்! செய்ய ஆரம்பித்து விட்டால் எந்தச்
செயலும் தானாக வந்து விடும். அதற்காகவெல்லாம் ரொம்ப சிக்கலாக யோசித்துக் கொண்டு
சிரமப்பட வேண்டாம்.
நமக்குப் பிடித்த மாதிரி இருந்தால் எல்லாம்
இன்பமாக இருக்கும். நாம் வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் இருந்தால், பிடித்தமில்லாத வேலையை
நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பிடித்தமில்லாத வேலையைச் செய்யும் போது
தூக்கம் வருகிறது. கொட்டாவி வருகிறது. சற்று அந்த வேலையை விலக்கி விட்டு வந்தால் வந்த
கொட்டாவியும், தூக்கமும் போயே போய் விடும். விசயம் அவ்வளவுதான்.
நமது அதிகப்படியான மனஅழுத்தம் காரியங்களை
மேலும் கடினமாக்கும். காரியங்களைச் சுலபமாக்குவதில் நமது இலகுவான மனநிலையும் முக்கிய
பங்கு வகிக்கிறது.
பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து விட்டால்,
அதே நிலையில் ஒரு செயலையும் செய்ய ஆரம்பித்து விட்டால் நிகழ்பவைகளும் அது போலவே அமைகின்றன.
அதற்கு மாறாக இருந்தாலோ, செய்தாலோ நிகழ்வுகளும் அவ்வாறே அமைகின்றன.
*****
No comments:
Post a Comment