வீட்டுக்கனவில் காசு பண்ணும் மாபியாக்கள்
முன்பெல்லாம் மாபியாக்கள் யார் என்பதைப்
பிரித்து அடையாளம் காண முடிந்தது. இப்பொதெல்லாம் அந்த அடையாளங்கள் தொலைந்து விட்டன.
அன்றாடம் பழகிக் கொண்டிருக்கும் நம் நண்பர் கூட நமக்கு மாபியாகவா இருக்கலாம்.
நிதிச் சேவைகள் என்ற போர்வையில் இன்று
யார் வேண்டுமானாலும் ஓர் ஏஜென்டாகி நமக்கு எதிரான மாபியாவாக உருவெடுக்கலாம்.
நம்முடைய வீட்டுக் கனவுதான் நிதிச் சேவை
மாபியாக்களின் இலக்கு. உங்களுக்கு அதிகபட்சமாக வழங்கப்படும் தனிநபர்க் கடனை விட நீங்கள்
வாங்க இருக்கும் வீட்டு மனை எனும் பிளாட்டின் விலை இருக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒரு மனிதரின் அதிகபட்ச தனிநபர்க் கடன்
அளவை விட இந்த நாட்டில் ப்ளாட்டகளின் விலை எப்படி உயர்கிறது? அப்போதுதான் அவனை இன்னும்
அதிக கடனாளியாக்கி உறிஞ்சிப் பிழியலாம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இப்படி
ஒரு சூழ்நிலை இங்கு நீடிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
பிறகு வீடு கட்டக் கடன், வீட்டு உபயோகப்
பொருள்கள் வாங்க மாதாந்திரத் தவணைத் திட்டம் என்று காலில் விழாத குறையாக வாங்க வைத்து
பின் கழுத்தை இறுக்காகத் குறையாக ஒவ்வொன்றாக நம்மிடமிருந்து தூக்குவார்கள். குறுக்கே
நின்றால் ஆளையும் தூக்குவார்கள்.
கழுத்து மட்டும் கடன் வாங்கித்தான் ஒரு
சராசரி மனிதன் இடம் வாங்கி, பின் தலைக்கு மேல் கடன் வாங்கித்தான் வீடு கட்ட முடியும்
என்பது ஒரு நல்ல நாட்டிற்கு உரிய இலக்கணமாகாது.
வீடு என்பது வாழ்வதற்கு! கடனால் வீழ்வதற்கு
அல்லவே!
நாமெல்லாம் வீடு கட்ட கடன் வாங்கி நிதிச்சேவை
மாபியாக்களின் அடிமைகளாக சேவகம் செய்ய பணிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதாக மாறிக் கொண்டிருக்கும்
நம் சமகால நடுத்தர வர்க்க வாழ்வு தூண்டில் புழுவுக்கு ஆசைப்படும் மீனை விட மோசமானது
என்பதையன்றி வேறெப்படி இதைச் சொல்வது?
*****
No comments:
Post a Comment