எதற்காக எழுதுகிறான் எஸ்.கே என்றால்...
எஸ்.கே. எழுதிக் கொண்டிருப்பது எல்லாம்
பேச நினைத்து வாய்ப்பில்லாமல் போன அவனுடைய சங்கதிகள்தாம்.
இடைவிடாது அவன் மனதோடு அவன் ஒரு மனமாக
நின்று நிகழ்த்திய பேச்சுகள்தான் அவன் எழுத்துகள்.
அவனைப் பொருத்த வரையில் சொல்வதில் புதுமை
இருக்கிறது அல்லது இல்லை என்பது முக்கியமில்லை, சொல்லிக் கொண்டு இருப்பதுதான் முக்கியம்.
உரையாடுவதையும், எழுதுவதையும் அவன் தன்னுடைய
நோக்கமாக நினைக்கிறான்.
அவன் தன் எழுத்துகள் மூலம் மனிதர்களின்
மனதை அப்படியே ஓரிடத்தில் விமானம் தரையிறங்குவது போல தரையிறக்கி விட வேண்டும் என்று
நினைக்கிறான்.
உணர்ச்சிவசப்படுதலே மனதை பறக்கடிக்கிறது
என்பது அவன் கருத்து. மனதை மாற்றி மாற்றிப் பல்வேறு நிலைகளுக்குப் போடுவதாக அவன் உணர்ச்சிவசப்படுதல்
குறித்து விமர்சனம் செய்கிறான்.
உணர்ச்சிவசப்படுதல் நின்று விட்டால் மனம்
ஒரு நிலைப்படுகிறது. எஸ்.கே. சொல்வதைக் கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்...
எஸ்.கே.வே உணர்ச்சிவசப்படுபவன்தான்!
*****
No comments:
Post a Comment