பலி
ஆண்டுக்கொரு
முறை நடக்கும்
சுடலைமாடன்
திருவிழாவில்
ஆடுகள்
கோழிகள்
பலி கொடுக்கப்படும்.
வறட்சியால்
இந்த ஆண்டு
பலி நின்று
விடக் கூடாதென்று
விவசாயிகளையே
பலியாகக் கொடுத்து
திருப்தி செய்து
விட்டோம்
சுடலைமாடஞ்
சாமியை!
*****
No comments:
Post a Comment