முதலும் முடிவும்
"எவ்வளவு செலவானாலும் பராவயில்ல!"
என்ற ராகவன் ஆஸ்பிட்டல் பில்லைப் பார்த்ததும் சண்டைப் போட தயாரானான்.
*****
சரி
"காலம் பூராவும் சண்டை போட்டுகிட்டே
சேர்ந்து வாழ்றதை விட, ஒற்றுமையா அமைதியா பிரிஞ்சுப் போறது பரவாயில்ல!" மாலினி
சொன்னது சரியெனப் பட்டது மகேசுக்கு.
*****
நல்ல அரிசி
"கடன்பட்டாவது விவசாயம் பண்றதாலதான்
திங்குறதுக்கு ரெண்டு வாய் நல்ல அரிசியாவது கிடைக்குது! இல்லேன்னா ப்ளாஸ்டிக் அரிசிதான்!"
நன்மாறன் சொல்ல விவசாயிகள் போராட்டத்தை இழிவாகப் பேசியதற்காக வெட்கப்பட்டான் நரேஷ்.
*****
No comments:
Post a Comment