மனச்சோர்வின் மாமருந்து
எதுவும் செய்ய முடியாதது போல் ஒரு மனச்சோர்வில்
இருந்தான் எஸ்.கே. அது அப்படி இருந்தால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்கிறான்.
அதற்கு என்ன செய்வது? என்றும் அவன் கேள்வி எழுப்புகிறான்.
எதுவும் செய்யாதே. ஓய்வாக இரு. இப்படிச்
சொன்னால் மனம் கேட்குமா? கேட்காது. இப்போது மனமே ஓய்வாக இருக்கிறது. இருந்து விட்டுப்
போகட்டும். இதுதான் எஸ்.கே. தரும் விளக்கம்.
மனம் ஒரு அடம் பிடிக்கும் குழந்தையைப்
போன்றது. கவனமாகத்தான் கையாள வேண்டும். இதுவும் எஸ்.கே. தரும் விளக்கம்தான்.
இதன் பின்னணி என்னவென்றால்,
எஸ்.கே. எழுதி எழுதி அலுத்து விட்டான்.
இதற்கு மேலும் எழுத வேண்டுமா? இப்படி எழுதுவதற்குதான் பிறப்பா? இப்படி எழுதி எழுதி
எதற்காக மாய்ந்துப் போக வேண்டும்?
ஒவ்வொன்றிலும் எழுதுவதற்கு ஆயிரமாயிரம்
பேர் இருக்கிறார்கள். இதில் அவ்வபோது எஸ்.கே.விற்கு எழுத இடம் கொடுத்ததே பெரிய விசயம்.
அத்தோடு விட்டு விடு என்று எஸ்.கே. இப்போதெல்லாம் அமைதியாக இருக்கிறான்.
*****
No comments:
Post a Comment