27 Jul 2017

எஸ்.கே.யிடம் விவாதித்தல்

எஸ்.கே.யிடம் விவாதித்தல்
            நீங்கள் எஸ்.கே.யைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இப்படி அவனை நினைத்து நான் தவறு செய்வது இது முதல் முறையன்று.
            தர்க்க ரீதியாக ஒரு காரணத்தைச் சொன்னால் அதை எஸ்.கே. ஏற்றுக் கொள்வான் என்று நினைத்து விட்டேன். யாரும் அப்படி எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவரவர்கள் தங்கள் மனநிலைக்குத் தகுந்தாற் போல்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். அதைத்தான் எஸ்.கே. நேற்று நிரூபித்தான். தன்னுடைய கருத்தைச் சொல்லி, அதை அப்படியே எஸ்.கே. ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான்.
            எல்லா மனிதருக்கும் அப்படி ஒரு மனநிலை இருக்கும், தாங்கள் சொல்வதைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று. அதை அவர்கள் வலியுறுத்துவதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் சென்று வாதம் நிகழ்த்துவார்கள். அதை நான் தவறு என்று சொல்ல முடியாது.
            அப்படிப்பட்டவர்களிடம் நாம் வாதம் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் உண்மையான வாதப் பிரதிவாதம் என்பது மனநிலைக்கு அப்பாற்பட்டது. அதை மனநிலை சார்ந்து முடிவு எடுப்பவர்களிடம் போய் விவாதிக்க முடியாது. அவர்கள் விவாதத்திற்கே தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
            எஸ்.கே.யைப் பொருத்த வரையில் அப்படி விவாதத்திற்கே தகுதியற்றவன் என்று ஒரே அடியாக முடிவெடுத்து முடியாது. அப்படி முடிவெடுக்காமல் இருக்கவும் முடியாது.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...