28 Jul 2017

முதலில் அரசியலுக்கு வரப் போவது ரஜினியா? கமலா?

முதலில் அரசியலுக்கு வரப் போவது ரஜினியா? கமலா?
            சூப்பர் ஸ்டார், உலக நாயகன் - இருவருமே குழப்படியாகப் பேசுவதில் வல்லவர்களாக இருப்பதால் இருவருக்குமே அரசியலுக்கு வருவதற்கான தகுதி இருக்கிறது.
            அரசியலைப் பொருத்த வரையில் ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். வேறொன்றைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அதை இருவருமே சமத்தாக செய்து கொண்டிருப்பதால் இருவருமே தற்போதைய சூழ்நிலையில் பகுதிநேர அரசியல்வாதிகள்தான்.
            இந்த இருவரில் யார் முந்திக் கொள்கிறார்களோ, அவருக்கு அரசியல் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மற்றவர் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது.
            சினிமாவைப் போல் இருவருக்கும் சரிசமமான இரு இடங்களைக் கொடுக்காது அரசியல். ஒருவரைத் தூக்கி விட்டு, மற்றொருவரை அதள பாதாளத்திற்குத் தள்ளி விட்டு விடும்.
            கமலா? ரஜினியா? யார் முதல் என்றால்... எம்முடைய கணிப்பு சரியாக இருந்தால்... இருவருமே அரசியலுக்கு வர மாட்டார்கள். அப்படியே வருவதாக இருந்தாலும்... கமல்தான் முதலில் அரசியலுக்கு வருவார்.
            எஸ்.கே.யின் கருத்துப்படி கமல் மாநில அரசியலுக்கும், ரஜினி தேசிய அரசியலுக்கும் பொருத்தமானவர்கள்.
            இருவரில் யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் அது பார்த்து பழகிப் புளித்துப் போன அதே பழைய கிளைமாக்ஸ்தான்.
            பார்த்த படத்தைப் பார்ப்பதில் நமக்குதான் எவ்வளவு விருப்பம். அதை வைத்துதான் அவர்களும் இவ்வளவு நாள் பிலிம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...