27 Jul 2017

எஸ்.கே.க்கு ஏற்படும் பிரச்சனைகள்

எஸ்.கே.க்கு ஏற்படும் பிரச்சனைகள்
            நிறைய விசயங்கள் எஸ்.கே.யிடம் சொல்ல மறுக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது. அவைகள் தெரிந்தால் எஸ்.கே. அது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறான். நினைக்கிறான்தான். முடிவுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டால்தான். ஆக நிறைய விசயங்களில் விதியின் கை வலிமையானது. ஏன் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்? இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதற்கான பதில் விதிதான். ஏனெனில் அவர்களைக் குறை சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வந்து விடும்.
            எல்லாரும் அவரவர்களின் மனப்போக்கின் அடிப்படையில்தான் நடக்கிறார்களே தவிர, யாரும் எஸ்.கே.யின் எந்தக் கருத்தையும் கேட்பதில்லை. எஸ்.கே. ஒரு தத்துவ ஞானியைப் போல பதில் சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறான். யார் பிரச்சனையைச் சொல்கிறார்களோ, அந்தப் பிரச்சனையாக மாறி பதில் சொல்லக் கூடாது. அல்லது அவர்களாக மாறி பதில் சொல்லக் கூடாது. பிரச்சனை என்பது தற்காலிகத் தோற்றம்தான். அதே தோற்றத்தில் அது எப்போதும் இருக்கப் போவதில்லை. அந்த வடிவத்தை அது மாற்றிக் கொண்டே இருக்கும். ஆக,ஒவ்வொரு பிரச்சனைக்கும் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்க முடியுமா?
            முடிவுகளை அவரசப்பட்டு எடுக்க வேண்டாம். இதைச் செய் என்று அவசரப்பட்டு சொல்ல வேண்டாம். ஏனென்றால் இங்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் அவசரம் மற்றும் இதை இப்படிச் செய், அப்படிச் செய் என்று சொல்வதால் ஏற்படும் பிரச்சனைகளே. எல்லா முடிவுகளும் தானாக ஏற்படும். எல்லா பிரச்சனைகளும் தானாக ஒரு முடிவுக்கு வரும்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...