சிக்கிக் கிடக்கும் சமூக வெளி
எஸ்.கே.யிடம் சமூக வலை தளங்கள் மற்றும்
எழுத்து குறித்து உரையாடியதிலிருந்து ....
சமூக வலைதளங்கள் மனிதனை அடிமையாக்குகின்றன.
மனிதனுக்கு இருக்கும் புகழ், பெயர் மீதான ஆசை இவைகளுக்குத் தீனி போடும் தளங்களாக அவைகள்
விளங்குகின்றன. தன்னைப் பலர் பின்தொடர்வதையும், தன் பதிவுகளுக்குப் பலர் விருப்பம்
போடுவதையும், கருத்துகள் சொல்வதையும் மனிதன் விரும்புகிறான். சமூக வலைதளங்களுக்கும்,
மனிதனுக்குமான பிணைப்பு இப்படித்தான் உருவாகிறது. பிறகு அந்தப் பிணைப்பு அறுத்து எறிய
முடியாத இரும்புச் சங்கிலி போல மாறி விடுகிறது.
இந்தச் சமூக வலைதளங்களில் பலர் இயங்குவதைப்
பற்றி இப்படித்தான் நினைக்கிறேன். இந்தச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்குபவர்கள்
ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். தொடர்ந்த இயக்கம்
இதில் முக்கியம். அதற்கானப் பலன்கள் கீரைகளை விதைத்து சில மாதங்களில் கிடைப்பது போல்
விரைவாகக் கிடைக்கலாம். அல்லது மரங்களை விதைத்து பல ஆண்டுகள் கழித்து கிடைப்பது போல
கிடைக்கலாம். பலன்கள் ஒரு வழியாக கிடைத்து விடும்.
மனதில் இருப்பதை வெளிப்படுத்துதான் எழுத்து.
மனதை எழுத வேண்டும். மனம் மாய உலகம். மனம் மாய நதி. மனம் மாய மலை. மனம் மாய வலை. அதை
எழுதுவது ஓர் அற்புதமான அனுபவம்.
*****
No comments:
Post a Comment