பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
எஸ்.கே.யைப் பொருத்த வரையில் அவன் முயற்சி
செய்து அடைந்த விசயங்கள் குறைவு. அதுவாக எதாவது நடந்த சம்பவங்கள்தான் அதிகம். எல்லாவற்றிலும்
அப்படி ஏதாவது நடந்தால்தன்.
பிரச்சனையே அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
ஏன் அப்படி நடக்க வேண்டும் என்று எஸ்.கே. எதிர்பார்க்கிறான்? எப்படியாவது நடந்து விட்டுப்
போனால் என்ன? அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொண்டால் என்ன?
சில விசயங்கள் அப்படித்தான் நடக்கும்.
அதற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாது. அதற்கு தான்தான் ஜவாப்தாரி என்று எஸ்.கே. நினைப்பதால்தான்
பிரச்சனையே. தான் அதற்குப் பொறுப்பாவதாக நினைப்பதுதான் எஸ்.கே.யின் பிரச்சனையின் ஆதிமூலம்.
அதே நேரத்தில் எஸ்.கே.விற்குத் தெரியாமல்
இல்லை, எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அசையாமல் இருப்பவர்கள் பிரச்சனையை வென்று விடுவார்கள்
என்பது.
*****
No comments:
Post a Comment