27 Jul 2017

எழுதுவதன் சூட்சமம்

எழுதுவதன் சூட்சமம்
             எழுதுவதுதான் உன்னுடைய வேலை என்றால், எழுத ஆரம்பித்தால் போதும். எழுதுவதற்கு முந்தைய மனநிலை முக்கியமல்ல. எழுத ஆரம்பித்து வரப் போகும் மனநிலைதான் முக்கியம். மனநிலைகளை நம்பி மோசம் போக வேண்டியதில்லை. அது ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்மாதிரியாக இருக்கும். செயலைச் செய்யும் போது ஒரு மாதிரியாக இருக்கும். செயலைச் செய்து முடிக்கும் போது ஒரு மாதிரியாக இருக்கும். மாறுபட்டுக் கொண்டே இருக்கும் ஒன்றை நீ பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
            உன்னை மனதளவில் எது பயப்படுத்துகிறதோ, அதைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான் ஞானம். எழுதும் போது எதற்காகவும் பயப்படாதே. எழுதும் போது பயந்தவன் அதற்குப் பின் எழுத முடியாத நிலைக்கு ஆட்பட்டு இருக்கிறான்.
            எழுதுவதைப் பற்றி கவலையுற வேண்டியதில்லை. மறதியினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவன் எஸ்.கே. அவன் எழுதவில்லையா? எதற்காகவும் அவன் எழுதுவதை விட்டு விடவில்லை. தன்னால் படிக்க முடியாத மனநிலைகளில் அவன் எழுதி எழுதியே படிக்கிறான். அவைகளையும் அவன் தன்னுடைய எழுத்துகளைப் போலதான் நினைத்துக் கொள்கிறான். எஸ்.கே.யைக் கேட்டால் எழுதி எழுதி படிப்பதுதான் என் முறை என்பான். தேவை பயிற்சியும் முயற்சியும்தான். எஸ்.கே. அடிக்கடி உதிர்க்கும் பொன்மொழியும் அதுதான்.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...