31 Jul 2017

மனிதம் முக்கியம் வருங்கால மருத்துவர்களே!

மனிதம் முக்கியம் வருங்கால மருத்துவர்களே!
            மூளையில் ஆணி வைத்து அடிப்பது போல இன்றைய பாடப்புத்தகங்களைப் குருட்டுப் பாடம் அடித்து படிப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தச் செய்யும். பாடப்புத்தகம் சார்ந்த அனைத்து முயற்சிகளும், முன்னெடுப்புகளும் மனப்பாடம் சார்ந்த முயற்சியில் மட்டும் இறங்கச் சொல்வதாக இருக்கிறது.
            எந்தப் பிடிவாதமான முயற்சிகளுக்கும் பின்னால் ஓர் ஆசை இருக்கிறது. இந்தப் பிடிவாதமான முயற்சிகளுக்குப் பின் இருக்கும் ஆசை பெரும்பாலும் டாக்டர் சீட் என்பதாக இருக்கிறது.
            எந்த முயற்சியும் மிதமான முயற்சியாக இருக்க வேண்டும். எந்த செயலும் மிதமான செயலாக அமைய வேண்டும். எந்த சொல்லும் மிதமான சொல்லாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவும் மிதமானதாக இருக்க வேண்டும். இயல்பாக செயல்படுவதற்கு அதுவே வசதியானது.
            எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்குத்தான் முயல வேண்டும். அளவைத் தாண்டும் போது அதற்கான மோசமான பின்விளைவுகளையும் சம்பந்தபட்டவர் அனுபவிக்க நேரிடும்.
            உரிய வசதிகள், வாய்ப்புகள் இல்லாமல் மிகை முயற்சியில் ஈடுபடும் எத்தனையோ பேர்களை அன்றாடம் கடந்து செல்லும் போது, தனி ஆளாக இந்த அளவுக்குச் செயல்படும் அவர்களின் ஈடுபாட்டைப் பாராட்டும் அதே நேரத்தில் அவர்கள் அதீத மனப்பிறழ்வு போன்ற மனநிலைப் பிறழ்வுகளுக்கு ஆளாகி விடக் கூடாது என்றும் கவலையும் ஏற்படுகிறது.
            ஆசையோ கவலையை வென்று விடுகிறது. அவர்கள் அப்படித்தான் முயற்சி செய்யப் பிறந்தவர்கள் என்பது போல  தூண்டப்படுகிறார்கள்.
            எதையும் விடவும் மனிதம் முக்கியம். அதை ஒரு மெடிக்கல் சீட்டுக்காக அடகு வைப்பதா? இப்படி தன்னிலைப் புரியாமல் படிக்க வைக்கப்படுபவர்கள் டாக்டர் சீட்டுக்குப் படித்துதான் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?!

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...