28 Jul 2017

ரைட்டரின் இயல்புகள்

ரைட்டரின் இயல்புகள்
            தான்தோன்றித் தனமாக எழுதுவதில் ஓர் இன்பம். எழுத்தின் மாய வலையில் சிக்கியிருக்கிறான் எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளன்.
            சிலந்தி வலையை வீசி மீன் பிடிப்பதும், தூண்டிலை வீசி மலையைப் பிடிப்பதும் எஸ்.கே.யின் எழுத்தெனும் மாய மந்திர ஜாலத்தில் சிறுநீர் கழிப்பதைப் போல் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுபவை.
            மானுடப் பிறவியினத்தை மாற்றப் பிறந்தவன் எஸ்.‍கே. என நினைக்கும் போது அவன் அல்பதனமாக நடந்து கொண்டவைகள் நினைவில் வந்து தொலைக்கின்றன.
            மகா அல்பன்தான் அவன் என்று நினைக்கும் போது அவன் செய்த மகத்தான மகோன்னதமான காரியங்கள் முன்வந்து நிற்கின்றன.
            நாம் சீக்கிரம் சென்றால் லேட்டாகவும், லேட்டாகச் சென்றால் சீக்கிரமாகவும் வரும் பேருந்தைப் போல எஸ்.கே. புரிந்து கொள்ள முடியாத முரணின் பிள்ளை.
            எந்த நேரத்தில் எப்படி இருப்பேன் என்று தெரியாத கிறுக்கனின் நிலையில் நான் இருக்கிறேன் என்று எஸ்.கே. ஒருமுறை சொன்னதை வைத்து அவனை ஒருவாறாக அனுமனிக்காலம்.
            அந்த கிறுக்குத்தனம்தான் எஸ்.கே.விடம் உங்களுக்கும், எனக்கும் பிடித்தது. நம்மால் கிறுக்காக ஆக முடியாது என்பதால் எஸ்.கே.வின் கிறுக்குத்தனங்கள் பிடித்துப் போகின்றன.
            நாம் பண்ண விரும்பும் பல கிறுக்குத்தனங்களை எஸ்.கே. செய்வதாலயே அவனை உற்று கவனிக்க வேண்டியதாகிறது. வெளியே குதித்த நம்முடைய நிர்வாண மனம் போல் இருக்கிறான் எஸ்.கே.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...