28 Jul 2017

ஓட்டை வழிக் கோட்டைகள்

ஓட்டை வழிக் கோட்டைகள்
            கொலையில் முடியும் குரூரங்களை இப்போதெல்லாம் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. நடுரோட்டில் வைத்து வெட்டுகிறார்கள். முக்கிய சாலையில் அமைந்திருக்கும் பிராய்லர் கடையில் வெட்டுப்பட்டு சாகும் கோழிகளைப் போல வெட்டுப்பட்டுச் சாகிறார்கள் மனிதர்கள்.
            வெட்டிச் சாய்ப்பதற்கும், உயிரை எடுப்பதற்கும் கூலிப் படைகள் இருப்பதாகப் பரவலான பேச்சு அடிபடுகிறது. இதற்குமா படைகளுண்டு என்று அப்பாவியாய்க் கேட்பவர்களைப் பார்த்து பெரிய ஜோக்கைச் சொல்லி விட்டதாய்ச் சிரிக்கத்தான் முடிகிறது.
            கோபம், பழிவாங்கல், உக்கிரம், பொறாமை மற்றும் அடக்க முடியாத உணர்ச்சிகளின் வடிகால்களாக இப்படிப்பட்ட கொலைகள் நிகழ்த்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.
            இப்படிக் கொலையை நிகழ்த்திப் பார்ப்பவர்கள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக அவர்களே மக்கள் தலைவர்களாக மாறும் அவலத்தை இன்றைய சிவில் சமூகம் எதிர்கொண்டு வருகிறது.
            ஒரு கொலையை நிகழ்த்திவிட்டு ஒருவன் சமூகத்தின் தலைமைக்கு வர முடியும் என்றால், சமூக ஒழுங்கைக் காப்பதற்கான அமைப்புகளிடம் இருக்கும் மாபெரும் ஓட்டையை யாரும் மறுக்க முடியாது.
            அது ஓட்டையாகவே நீடிக்குமானல், தவறு செய்து தலைவர்களாக ஆகுபவர்களுக்கு அதுவே கோட்டையாகவும் அமையும்.
            உடனடியாக அடைக்கப்பட வேண்டிய ஓட்டைகள் அடைக்கப் படாவிட்டால் கப்பல் மூழ்கி விடும். மூழ்கிக் கொண்டிருக்கின்ற கப்பலில் நாம் தத்தளித்துக் கொண்டிருப்பதைத் தாமதமாகவேனும் நாம் உணர மறுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை என்ன சொல்வது?

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...