அம்பலமாகும் ரகசிய விதிகள்
எதையும் போட்டு அலட்டிக் கொண்டு இருக்காதீர்கள்.
சமூகக் கட்டுபாடுகள்,
ஒழுக்க நியதிகள்,
குற்ற உணர்ச்சி,
வெற்றி குறித்த சந்தேகங்கள்,
தோல்வி குறித்த அச்சங்கள் - இப்படி அலட்டிக்
கொள்வதற்கு ஆயிரம் விசயங்கள். இவைகள்தான் மனதைப் பிறழச் செய்கின்றன. எளிமையாக இருந்து
விட்டால், இவைகளால் மனிதனை எதுவும் செய்ய முடியாது என்பது ரகசியம்.
தைரியமாக இருங்கள். எப்போது உங்களால்
தைரியமாக இருக்க முடியவில்லையோ, கொக்கிகள் மேல் கொக்கிகள் போடுவது போல, கேள்விகள்
மேல் கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறுங்கள். அதற்காக அஞ்ச வேண்டாம். அந்த அச்சம்தான்
தைரியமிழக்கச் செய்யும் முதல் காரணி. அதே சமயத்தில் அர்த்தப்பூர்வமாகக் கேள்வி கேட்பதில்
என்ன தவறு இருக்க முடியும்?
ஒரு சிறிய மற்றும் பெரிய பின்குறிப்பு
என்னவென்றால், ஒவ்வொரு சின்ன விசயத்திற்கும் நீங்கள் எப்படி முடிவெடுக்கிறீர்களோ,
அதுவே பெரிய விசயங்களிலும் பிரதிபலிக்கிறது. உங்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ,
அப்படியே மற்றவர்களிடமும் நடந்து கொள்கிறீர்கள்.
மேற்குறித்தத் தகவல்கள் அனைத்தும் எஸ்.கே.யிடமிருந்து
ரகசியமாக உரையாடிக் கறக்கப்பட்டவைகள். பொதுமக்கள் நலன் கருதி அம்பலமாக்கப்படுகிறது.
*****
No comments:
Post a Comment