29 Jul 2017

நாயடி பேயடி டெக்னிக்

நாயடி பேயடி டெக்னிக்
            "போனால் போகட்டும் போடா!" என்பது அற்புதமான வார்த்தை மருந்து. மனதால் எதை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாலும் அதில் முன்னேற முடியாது. பிரேக்கைப் பிடித்துக் கொண்டு அதே நேரத்தில் ஆக்சிலேட்டரையும் திருகி விட்டபடி வண்டி ஓட்டுவதைப் போல அது ஓர் அவஸ்தை. நீ எதைப் பிடித்து இருக்கிறாயோ, அதை விலக்கி வைத்திருக்கவும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
            எஸ்.கே.யின் வழக்கு ஒன்றில் அவன் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்து போது அவனுக்கு மன இறுக்கமும், மன உளைச்சலும்தான் ஏற்பட்டது. அதுவே என்னவாக வேண்டுமானால் ஆகட்டும் என்று நினைத்து போது அவன் அதிலிருந்த விடுபட்டு விட்டான். ஆக இங்கு இறுக்கிப் பிடிப்பது எதிரியல்ல. அவரவர் மனம்தான். அவரவர் மனமே அவரவரையும் கழுத்தை இறுக்கிப் பிடிப்பது போல நெருக்கிப் பிடிக்கிறது என்பது உண்மை.
            "பிடிவாதமாக ஒரே கருத்தில் நிற்பது நல்லதல்ல. ஏனென்றால் நீ பிடியை இறுக்க இறுக்க, அதுவே உனக்கு சுருக்குக் கயிறாக மாறும்.
            இன்னும் சொல்லப் போனால், நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. நீ எதையாவது செய்ய செய்ய அது பிரச்சனையாக மாறும். நீ பாட்டுக்கு இரு. பிரச்சனை அது பாட்டுக்கு ஒரு பக்கத்தில் கிடக்கும்." எஸ்.கே. இப்படி அந்த அனுபவத்தை டைரியில் குறித்துக் கொண்டான்.
            பிரச்சனையை இப்படித்தான் எஸ்.கே. நாயடி, பேயடி அடித்து தப்பித்துக் கொண்டிருக்கிறான். உங்களுக்கும் உதவலாம் என்றால் எஸ்.கே.யை பாலோ பண்ணுங்கள். வேண்டாம் என்றால் படிப்பதோடு விட்டு விடுங்கள். என்ன மோசமாகப் போய் விட்டது!

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...