29 Jul 2017

பாவப்பட்ட மனமுடைய மனிதர்களுக்கு...

பாவப்பட்ட மனமுடைய மனிதர்களுக்கு...
எஸ்.கே.யின் சுய பிரசங்கங்களுள் ஒன்று இது -
            நீ எதற்காக ஒன்றைச் செய்கிறாய்? அதன் மூலம் நீ யார் என்பதை காட்ட விரும்புகிறாய். உன் புகழை நீ நிலைநிறுத்த விரும்புகிறாய். உன் ஆணவத்தை மேலும் உரம் போட்டு வளர்க்க நினைக்கிறாய். அதற்குத்தான் நீ ஒன்றைச் செய்ய நினைக்கிறாய். எதைச் செய்தால் நீ நீயாக இருப்பாயோ, அதை மட்டும் செய். மற்ற அநாவசியங்கள் தேவையற்றது.
            நீதான் தோளில் போட்டு எல்லாவற்றையும் சுமப்பதாக நினைத்தால் தொலைந்தாய். அதற்கேற்ற அவ்வளவு இறுக்கத்தையும் நீதான் சுமக்க வேண்டும். அப்படி எண்ணமிருந்தால் விட்டு விடு.
            எஸ்.கே. ஆகிய என்னையே எடுத்துக்கொள். நான் பாட்டுக்கு எப்படியாவது இருந்து விட்டுப் போகிறேன் என்று விட்டு விட்டால், எந்தப் பிரச்சனையும் இல்லை. அதை இப்படி அப்படி என்றெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தொலைந்து விடுகிறேன். கூடவே ஓர் எதிர்பார்ப்பும் உருவாகிறது. அந்த எதிர்பார்ப்பின் படிதான் நடக்க இருப்பது நடக்க வேண்டும் என்று மனம் பிரியப்படுகிறது. ஆனால் நிதர்சனம்? அப்படி நடக்காது. அதை நினைத்துப் பார்க்க மனம் விரும்புமா? மனதுக்கு அது ஒரு பாரம். மனம் பாவம்.
            நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்தால் வாழ்வில் உன்னை எந்தத் துன்பமும் நெருங்காது. துன்பங்களைத் தூள் தூளாக்கும் வல்லமை வேலைக்கு உண்டு. வேலையில் ஆழ்ந்து விட்டால் நீ உன்னையே மறந்து விடும் போது, துன்பங்களையா நினைவில் வைத்துக் கொண்டு இருப்பாய்?

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...