29 Jul 2017

மந்திர தந்திர வாசகம்

மந்திர தந்திர வாசகம்
            "கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே." எஸ்.கே. அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வாசகம். எஸ்.கே.வுக்கு மிகவும் பொருந்தக் கூடிய வாசகம். எஸ்.கே. நிறைய எழுதியிருக்கிறான். பிரசுரம் ஆனவை சொற்பம். அப்போது ஏற்பட்ட மனசிக்கல்களை மேற்கண்ட வாசகத்தைக் கொண்டுதான் சரிசெய்து கொண்டிருந்திருக்கிறான்.
            பலன் கிடைக்குமா?
            பலன் கிடைக்காதா?
            பலனை அடையாமல் போய் விடுவேனோ?
            பலனைப் பாராத துரதிர்ஷ்டசாலியாய் ஆகி விடுவேனோ? என்று எஸ்.கே. பல நேரங்களில் பல விதமாக கலங்கியிருக்கிறான். அவனுக்கு பலவற்றிற்கும் அந்த வாசகத்தில் விடை இருக்கிறது.
            எஸ்.கே. மேலும் கூறுவது என்னவென்றால், "மனதில் எழும் கருத்துகள் பல விதம். மனதில் எழும் எந்தக் கருத்துகளும் உண்மையானது இல்லை. அடுத்தவர்கள் தூண்டி விடுவதால் ஏற்படும் கருத்துகளே. அவர்கள் உணர்வைத் தூண்ட முயல்கிறார்கள். அதை தாறுமாறாக செய்து விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் மீன் பிடிக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்."
            எல்லா பிரச்சனைகளும் கற்பனைவாத பிரச்சனைகள் எனும் போது, எஸ்.கே. ஆறுதல் கொள்ளும் "கடமைச் செய், பலனை எதிர்பாராதே!" என்ற வாசகம் கன கச்சிதமாக அவனுக்குப் பொருந்திப் போய் விடுகிறது. இதுவும் எஸ்.கே. சொன்னதுதான். முதல் வரிக்கும், கடைசி வரிக்கும்தான் எவ்வளவு முரண்பாடு. அதுதான் எஸ்.கே. அதுதான் எஸ்.கே.யின் டச்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...