31 Jul 2017

நீ உன் மனதைத்தான் எதிர்கொள்கிறாய்!

நீ உன் மனதைத்தான் எதிர்கொள்கிறாய்!
            எதில் நம்பிக்கை வைக்கிறாயோ அதில் நம்பிக்கை அற்றுப் போகும் அளவுக்குச் சூழல்கள் உண்டாகும். நம்பிக்கை வைப்பதே தவறு எனத் தோன்றும். சூழ்நிலைகள் உலுக்கி எடுக்கும். நிதானமாக உன் வழியில் போய்க் கொண்டிரு. உன்னால் செய்ய முடிந்தது அது மட்டுமே.
            அதுவாக எது வந்தாலும் சரிதான். நீயாக வரவழைப்பதில்லை என்ற முடிவில் இரு.
            உன் ஐடியா உனக்குத் தோன்றுவதுதான். அது எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும்.
            இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம்? அது எப்படி வேண்டுமானால் இருக்கட்டும்.
            இனி எதுவும் எழுதாதே. பேசாதே. தேவையென்றால் ஒன்றரை பக்க அளவில் நாளொன்றுக்கு எழுது. நூற்று இருபது வார்த்தைகள் எண்ணிப் பேசு.
            முடிவாகச் சொல்கிறேன், எந்த ஒரு மாபெரும் பிரச்சனையாக இருந்த போதும், நீ உன் மனதைத்ததான் எதிர்கொள்கிறாய்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...