29 Jul 2017

கவலைகள் கவலைப்படட்டும்!

கவலைகள் கவலைப்படட்டும்!
            பல வேலைகளைச் செய்யும் நிலை ஏற்படும் போது, முடியாது என்று துணிந்து சொல். உன் மரியாதை அதனால் அதிகமாகுமே தவிர குறையாது.
            மாறாக நீ பல வேலைகளை ஒப்புக் கொண்டு ஈடுபட்டால், அதனால் உன் வேலை தரம் குறைந்து உன் மேல் உள்ள மரியாதை குறையுமே தவிர அதிகமாகாது.
            எஸ்.கே. இதில் கெட்டிக்காரன். தன் எழுத்தை இன்னொன்று ஏன் தீர்மானிக்க வேண்டும் என்று என்ன அவசியம்? என்று கேள்வி கேட்டவன் அவன். இன்னொன்று தீர்மானித்து தன் படைப்புகள் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அவசியம் அப்படி என்ன வந்து விட்டது? என்று உரத்த குரல் எழுப்பிய ஆத்மா அவன்.
            தனக்குள் இருக்கும் படைப்பாளன் என்ன சொல்கிறானோ, அதை மட்டும் எழுத நினைக்கிறான் அவன். படிப்பார்தான் யாருமில்லை.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...