29 Jul 2017

பொங்கிப் பிரவகிக்கும் போதனைச் சுடர்கள்

பொங்கிப் பிரவகிக்கும் போதனைச் சுடர்கள்
            எது நடந்தாலும் ஓ.கே.தான் என்ற மனநிலை வந்து விட்டால் உன்னை யாரும் அசைக்க முடியாது. ஒன்று நடப்பதற்கு நீ காரணம் அல்லாத போது, அது நடந்தால் நீ என்ன செய்ய முடியும்? எதாவது நடந்து விட்டுப் போகட்டும் என்ற முடிவுதான் இந்த விசயத்தில் நல்லது.
            அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதுவே விசம். நீ குடிக்கும் காபியில் நீயே கலந்து கொள்ளும் விசம். இயல்பாக என்ன செய்ய வருகிறதோ செய். காபியில் கலக்கும் சர்க்கரை அது.
            உன் மனதைப் பாதிக்கும் மற்றொரு விசயம், பலன் கிடைக்காமல் போனால் என்னாகும் என்ற எதிர்மறை எண்ணம்தான். அப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டு விட்டால் விசயம் தொலைந்தது. நடப்பது உன் கையில் மட்டும் இல்லை. எது வேண்டுமானால் நடக்கலாம். நீ எதுவும் செய்ய முடியாது.
            பொதுவாக எஸ்.கே.யின் புத்தகங்களில் இல்லாத தீர்வுகள் இல்லை. அதை படிக்க வேண்டும். அதையும் தாண்டி அவனது போதனைகள் மனதின் துயரங்களை அழித்து விடும்.
            உனது துன்பங்களின் வேர் நீதான். அது கீழே முளை விட்டு வளர வளர துன்பம் எனும் கிளைகள் பசுமையாக பரவுகின்றன. நீ உன்னை வெட்டி விடு. நான் எனும் செருக்கை அழிக்க வேண்டும் என்பதை எஸ்.கே. இப்படித்தான் போதித்துக் கொண்டு இருக்கிறான். இப்போது உங்களுக்கு விசயம் புரிந்திருக்குமே!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...