30 Jul 2017

படிப்பது குறித்து எஸ்.கே. - சில குறிப்புகள்

படிப்பது குறித்து எஸ்.கே. - சில குறிப்புகள்
            எஸ்.கே. தேர்வுக்குப் படித்த போதெல்லாம் அலட்டிக் கொண்டுதான் படித்தான். எப்படிப் படித்தாலும் மறதி என்பது இருக்கும். ஆகவே இயல்பாக படிக்க வேண்டும். இதை எஸ்.கே. தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அது எப்படியென்றால்...
            "இயல்பாகப் படி. நினைவில் இருப்பது இருக்கட்டும். அது போதும். உன் இயல்பை எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் பொறுமையாகவும், அமைதியாகவும் தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்து கொண்டிருக்க வேண்டும்.
            இதை ஒரு பயிற்சியாகச் செய்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. மாறாக அதைத் தாண்டி ஆணவத்தோடும், தலைக்கனத்தோடும் செய்தால் விளைவுகள் சுத்த பூஜ்யம். மேதைமை என்பது தானாக வந்து பொருந்த வேண்டும். பொருந்த வைக்க முயல கூடாது. துருத்திக் கொண்டிருக்கும்.
            எந்தச் சிக்கல் என்றாலும் தலைக்கனத்தையும், ஆணவத்தையும் விட்டாலே அந்தப் பிரச்சனை ஒன்றுமில்லாமல் போய் விடும். அதைத்தான் விட முடியாது. அப்படியென்றால் சிக்கலும் விடாது பிடித்துக் கொண்டிருக்கும். தப்பிப்பதற்கு மார்க்கமில்லை."

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...