கோபம் - ஒரு புதிய பார்வை
கோபம் என்பது தேவைதானா? அவர்கள் அவர்களின்
சுபாவத்தின் படி இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் மனநிலையை மாற்றுவதை அனுமதிக்க மாட்டார்கள்.
நமக்கோ கருதிய கருமம் கைகூட வேண்டும். அந்தக் கருமத்திற்காக அவர்களை மாற்ற நினைத்தால்,
அவர்களின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டியதுதான். ஒவ்வொன்றும் அதனதன் நோக்கில் செல்லவே
விரும்பும். அதை திசைமாற்றி இத்திசையில் செல் என்றால் அது முதலில் கோபப்படவே செய்யும்.
பதிலுக்கு நாமும் கோபப்பட வேண்டியதுதான்.
எப்படிப் பார்த்தாலும் வன்முறை நியாயமற்ற
செயல். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களின் உலகமே தனி. அவர்களிடம் எடுத்துச்
சொல்ல வேண்டும். அவர்களிடம் மேலும் உரையாட வேண்டும். உரையாடும் வெளியின் வாயிலாகத்தான்
அவர்களை மாற்ற வேண்டும்.
நாம் கோபப்பட்டு அடித்து மாற்ற நினைக்கிறோம்.
ஒருவேளை அதை விட அற்புதமான மாற்றத்தை படைக்க பிறந்திருப்பார்களானால் நாம் செய்யும்
மாற்றம் அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகி விடும். ஆகவே அது வேண்டாம்.
அவர்களின் ஒழுங்கீனங்களை நோக்கத் தெரியாதவர்களே
அவர்களின் மீது கோபப்படுகிறார்கள். அவர்களை அடிக்கிறார்கள். அவர்களாக மாறுகிறார்கள்.
நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். அவர்கள் மாறா விட்டாலும் பரவாயில்லை.
அவர்கள் அப்படி ஒரு ஜீவனாக இந்த உலகில் இருக்க யாதொரு தடையும் இல்லைதானே.
*****
No comments:
Post a Comment