ஆணவத்தில் அடிக்கும் சம்மட்டி
பிரபஞ்சத்தின் இருப்பைப்
பார்க்கையில்
பிச்சையிடும் சல்லிக்காசு
எவ்வளவு எவ்வளவு சிறிது
என்று
எண்ணிப் பார்க்க
எங்கே நேரமிருக்கிறது?
அதை விட வேலை
பெரிதாக இருக்கிறது.
அதை விட மேலும் பெரிதாக
பிச்சையிட்ட காசிற்காக
பெருமை பேசிக் கொள்ள
நேரம் போதாமையாக இருக்கிறது.
காற்றும், ஒளியும், நீரும்
தந்த
பிரபஞ்சம் எதற்காகத்
தன்னைப் பற்றி பேசிக்
கொண்டது?
ஆக்ஸிஜன் சிலிண்டரும்,
மின்சார ஒளியும்,
மினரல் வாட்டரும்
தந்து விட்ட மனிதன்
தன் கைமாறுக்காக
சவாலுக்கு அழைக்கிறான்
ஆணவத்தில் அடிக்கும்
சம்மட்டி
பிரபஞ்சத்திடம் இருப்பது
புரியாமல்.
*****
No comments:
Post a Comment