1 Apr 2017

தெரிந்ததும், தெரியாததும்


தெரிந்ததும், தெரியாததும்
வீட்டைத் தாண்டி
எதுவும் தெரியாது அம்மாவுக்கு.
வாடி வரும் முகத்தைக் கொண்டே
யார் யாருக்கு
என்ன நடந்தது என்று
அத்தனையும்
சொல்லி விடுவாள்.
*****

எச்சரிக்கை
தூரத்தே வருகையில்
ஹாரன் சத்தம் கேட்டும்
கிட்டத்தே வருகையில்
பளீரென ஒளி வந்தும்
அடிபட்டுச் சாகிறது
சாலையில் ஒரு ஆமை.
*****



குத்தம்
முள்ளை விட
அதிகம் குத்தியது
முள்வாங்கி.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...