தர்மம்
ஹெல்மெட் போடாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் அந்த
சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான், "தர்மம் பண்ணுங்க சாமி! தர்மம் தலைகாக்கும்!"
*****
உண்டியல் பணம்
"காரியம் நல்லபடியா நடக்கணும்னு ஆளுக்கு
ஒரு ரூபா போட்டு வேண்டிக்குங்க!" என்றான் அந்த உண்டியல் திருடர்களின் தலைவன்.
*****
ஆகாது
மோர் குடித்த தலைவர் சொன்னார், "என்ன இருந்தாலும்
பீர் போல ஆகாது!"
*****
எவிடென்ஸ்
"எவிடென்ஸ் எதையும் விட்டு வைக்கல! கொன்னது
யாருன்னே தெரியாது பாஸ்!" என்று செல்பேசியவனின் வாட்ஸ் அப்பில் சற்று நேரத்துக்கெல்லாம்
வந்தது அவன் செய்த கொலை அப்படியே வீடியோவாக.
*****
தொழில் ரகசியம்
"பொது இடத்துல போட்டுத் தள்ளுறது ஆபத்து!"
என்று எச்சரிக்கை செய்த செயின் ஜெயபாலிடம், "ம்ஹூம்! இதுதான் பெஸ்ட்! கண்காணிப்பு
கேமிரா இல்ல பாரு!" என்றான் ஆதிகேசவன்.
*****
No comments:
Post a Comment