கனவு
"ரொம்ப நாள் ஏக்கம் சார் இது!" என்றார்
ஒரு நாள் முழுவதும் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்த மார்கெட்டிங் மேனேஜர்
முருகராஜ்.
*****
தீர்வு
"தனி ஈழம் தீர்வாகாது" பரபரப்பு பேட்டியளித்தார்,
பத்து நாள்களுக்கு முன் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்ற அன்டன் பால்.
*****
தலைவர்
"என் இனம்! என் மக்கள்! என் கலாச்சாரம்!"
ஜூன்ஸ் பேண்டும், டீ-சர்ட்டும் போட்டுக் கொண்டு உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டு இருந்தார்
தமிழினத் தலைவர்.
*****
டிபரெண்ட்
"இன்னும் டிபரெண்டா..." என்ற தயாரிப்பாளரிடம்,
இயக்குனர் சொன்னார், "இந்த மசாலா படத்தை உலகத் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைக்கிறோம்!"
*****
No comments:
Post a Comment