முதியோர் இல்லம்
"தனிக்குடித்தனம் போகலாம்னு..." என்று மகன் தீபக் ஆரம்பித்ததுமே, "வேண்டாம்பா!
நாங்க ரெண்டு பேரும் முதியோர் இல்லம் போயிக்கிறோம்!"
என்று ஒத்தக்குரலில் சொன்னனர் தீபக்கைப் பெற்றெடுத்த புண்ணியவான்கள்
இருவரும்!
*****
பஞ்ச்
"இந்தப் படத்துல பஞ்ச் டயலாக்கே கிடையாது!"
என்று டைரக்டர் சொன்னதும், "சூப்பர் சார்!
இதையே பஞ்ச் டயலாக்கிப் பேசிடறேன்!" என்றார்
சூப்பர் ஆக்டர் ஜிப்ரிஷ்!
*****
சரிதான்
"விளையாடுறேன்னு கை காலை உடைச்சுக்காம இருந்தா சரிதான்!"
என்ற மொபைல் கேம் விளையாடும் மகன் தனுஷை ரசித்துக் கொண்டிருந்தார்
குருநாத்!
*****
No comments:
Post a Comment