31 Mar 2025

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு

அவசரப்பட முடியாது

நிதானமாகச் செல்ல வேண்டும்

பல நேரங்களில் பிடிபடிவதற்குப்

பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்

அதிகம் அடைய வேண்டும் என்று

ஆசை கொண்டு விட முடியாது

கிடைப்பது கொஞ்சமானாலும் அதில்

மகிழத் தெரிந்திருக்க வேண்டும்

எதிர்பார்க்கக் கூடாது என்பதல்ல

அது எவ்வளவு அளவோடு இருக்க வேண்டும் என்பதை

எப்போதும் புரிந்திருக்க வேண்டும்

கிடைக்கும் வெற்றிகளுக்காக மட்டுமல்லாது

தோல்விகள் கொண்டு வரும் அனுபவங்களுக்காகவும்

மகிழத் தெரிந்திருக்க வேண்டும்

சாதனைகளோ வேதனைகளோ

நம் கைகளில் கொஞ்சம் இருப்பது போக

நம் கைகளில் மட்டுமே எல்லாம் இல்லை என்கிற

தெளிவு எப்போதும் இருக்க வேண்டும்

நம்மளவில் நாம் முழுமையாக இருந்தாலும்

மொத்தத்தில் நாம் ஒரு பாகம் என்பதை மறந்து விடக் கூடாது

நாம் எதைக் கொண்டு வந்து சேர்ப்போம்

நம்மிடம் எது கொண்டு வந்து சேர்க்கப்படும் என்பது

எப்போதும் புதிரானது

எதற்காக நாம் எப்படி வினை புரிவோம் என்பது

நம்மால் அறிய முடியாது

அறிய வேண்டும் என்று பிரியப்படும் நாம்

காத்திருக்க வேண்டும்

ஒரு நாள் எல்லாம் தெரிய வரும்

நாம் அவ்வளவு துடித்திருக்க வேண்டாம் என்பது புரிய வரும்

காலத்தின் முன்னர் சென்று

இனி நாம் எதை மாற்ற முடியும்

வேறு வழி இல்லாத போது

நாம் நம் ஞானத்தை எல்லாருக்கும் அளிக்கலாம்

அதை எத்தனை பேர் எடுத்துக் கொள்வார்கள்

எத்தனை பேர் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள் என்பதல்ல

எடுத்துக் கொள்ள ஒருவர் நினைக்கும் போது

அது அங்கிருக்க வேண்டும்

அதைத் தவிர உங்கள் ஞானத்தால்

இந்த உலகை எதுவும் செய்ய முடியாது

அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கும்

*****

No comments:

Post a Comment

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா?

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா? ஒரு சில கிராமங்கள் இன்றும் கிராமங்களாக இருக்கலாம். நாம் பெரும்பான்மையைப் பற்றிப் பேச வேண்டியிர...