21 Mar 2025

புரிதல்

புரிதல்

உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்கிறாள் மனைவி.

உனக்குமா என்கிறேன்.

உனக்குமா என்றால் என்ன அர்த்தம் என்று முறைக்கிறாள்.

எனக்கும்தான் என்கிறேன்.

புன்முறுவல் பூக்கிறாள்.

*****

“என்னய்யா எழுதுகிறீர்கள். ஒன்று கூட புரிய மாட்டேன்கிறது.”

“உங்களுக்குமா?”

“எனக்கும்தான். என்ன செய்வது? ஒன்றாம் வகுப்பில் எழுத ஆரம்பித்த போது அதைப் பார்த்த ஆசிரியர் தலைதெறிக்க ஓடியவர்தான். அவரைப் பார்க்கும் பாக்கியமே இல்லாமல் போய் விட்டது. 

நீங்கள் பரவாயில்லை வாசித்துப் பார்த்திருக்கிறீர்கள். புரியாமல் போவதற்கு யார் என்ன செய்ய முடியும்? கடவுள் விட்ட வழி.

கடவுள் மேல் பாரத்தைப் போட்டு அடுத்த பத்திக்குச் செல்லுங்கள். அதுவாவது புரிகிறதா என்று பாருங்கள். இப்படியே போய்க் கொண்டிருங்கள். பத்து நாட்களுக்குள் பழகி விடும்.”

*****

எளிமையாக எழுதினால்

எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும்

என்றா நினைக்கிறீர்கள்

அது

எளிமையாகப் புரிந்து கொள்வதில் இருக்கிறது

எழுத்தாளர்களை எளிமையை நோக்கி

வரச் சொல்லக் கூடாது

வாசகர்கள்தான்

தங்களைச் சுலபமாக்கிக் கொள்ள வேண்டும்

*****

No comments:

Post a Comment

நம்பியோர் நன்றாக இருந்ததில்லை! ஐந்து வருட தீர்ப்பு!

நம்பியோர் நன்றாக இருந்ததில்லை! ஐந்து வருட தீர்ப்பு! “ஐயா அரச லிமிடெட் ஊழியர்கள் மற்றும் வாத்தியார்கள் வந்திருக்கிறார்கள்.” “என்னவாம்?” ...