கடைசியாகப் படிக்கும் தலைமுறை
ஒரு
போட்டித் தேர்வுக்குப் போயிருந்தேன்
யார்
கையிலும் புத்தகம் இல்லை
யாரிடமும்
என்றால் என்னைத் தவிர
எல்லார்
கையிலும் அலைபேசி
அலைபேசியில்
படித்துக் கொண்டிருந்தார்கள்
மற்றும்
கேட்டுக் கொண்டிருந்தார்கள்
மகள்
கூட படிப்பதற்கு PDF அனுப்பியிருக்கிறாள்
அடிக்கடி
இது போன்று அனுப்பி
அச்செடுத்து
வந்து விடுங்கள் என்கிறாள்
புத்தகம்
கிடக்கட்டும்
குறைந்தபட்சம்
கையேடுகள் (நோட்ஸ்) வைத்து படிக்கும் தலைமுறை கூட
ஒழிந்து
விட்டது
நானெல்லாம்
கையேடு (நோட்ஸ்) வைத்து படிப்பது தெரிந்து
ஆசிரியர்களிடம்
செமையாக அடி வாங்கியவன்
என்று
சொன்னால் எந்தத் தலைமுறை நம்பும்?
சொல்ல
மறந்துவிட்டேன் பாருங்கள்
மாத்திரை
போட்டுக் கொண்டும் படித்தார்கள்
சர்க்கரையோ
ரத்த அழுத்தமோ
படித்ததால்
வந்ததோ
படிப்பதற்கு
முன்போ வந்ததோ
ஆயிரம்தான்
சொன்னாலும்
தேர்வு
ஒன்றுதான் படிக்க வைக்கிறது
அல்லது
படிக்க வேண்டியதைப் பார்க்க வைக்கிறது
தேர்வுகள்
இல்லாத உலகில்
படிப்பது
என்பது மதிப்பிழந்து போய் விடுமோ என்னவோ
கடைசியாகப்
படிக்கும் தலைமுறையாக
இதுவாக
இருக்குமோ என்னவோ
*****
No comments:
Post a Comment