பிரபஞ்சம் மாறிக் கொள்கிறது
அம்மா ஒரு நாள் சாகிறார்
உடல் தந்தவர் எப்படிச் சாக
முடியும்
அப்பா ஒரு நாள் சாகிறார்
உயிர் தந்தவர் எப்படிச் சாக
முடியும்
ஒன்றை உருவாக்கி விட்டு
ஒவ்வொன்றும் ஒரு நாள் சாகத்தான்
வேண்டும்
வாழையடி வாழையாக
சாவதற்குதான் பூத்தோமா
சாவதற்குதான் காய்த்தோமா
சாவதற்குதான் கனிந்தோமா
சாவதற்குத்தான் நெடுநெடுவென
நின்றோமா என்றால்
சாவதற்காகத்தான் எல்லாம்
நடந்தது
சாவதற்கு முன் அழகாக
ஒரு மாலை விரிந்து மலரத்
துவங்கும் போது
சாவு நோக்கி வருவதைப் புரிந்து
கொண்டு
புதைகுழிக்குள் படுத்தக்
கொண்டு
புன்னகைப்பவர்கள் பாக்கியசாலிகள்
விதைகளுக்குத் தெரியும்
முளைப்பதற்காகத்தான் புதைகிறோம்
என்று
கனிகள் கனிந்து விதைகள் உதிர்ந்த
பிறகு
பிரசவமான விதைக்காக
இந்தப் பிரபஞ்சம் மாறிக்
கொள்கிறது
சவமான பிரேதங்களை
உண்டு செரித்துக் கொள்கிறது
*****
No comments:
Post a Comment