விளக்கமற்ற பொருண்மைகள்
நான் எல்லாவற்றையும் இழந்து
கொண்டு வருகிறேன்
முதலில் கவிதையை இழந்தேன்
படிப்படியாக உரைநடையை இழந்தேன்
சொற்களை இழக்க இழக்க பயம்
கூடிக் கொண்டு போனது
எழுத்துகளை இழப்பேன் என எதிர்பார்க்கவில்லை
மௌனம் ஒன்றே ஒட்டிக் கொண்டிருந்தது
அதையும் இழப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை
அர்த்தங்கள் எல்லாம் உதிர்ந்து
போயின
எஞ்சி நிற்கும் ஒலிப்புகள்
எனக்கான தேவையை நிறைவேற்றுவதற்காக
மட்டும் இருந்தன
அதற்கான அர்த்தங்கள் குறித்து
என்னிடம் விளக்க ஏதும் இல்லை
*****
No comments:
Post a Comment