21 Feb 2023

பழைமையில் புதுமையைக் கடத்தல்

பழைமையில் புதுமையைக் கடத்தல்

ஒரு முறை உன் உள்ளாடைக் கிழிசல் பரவசப்படுத்தியது

ஒரு முறை உன் அரை நிர்வாணம் சிலிர்க்க வைத்தது

உதட்டுச் சுழிப்புக் கூட ஒரு நேரத்தில்

உன்மத்தத்தை அதிகம் செய்தது

ஒரு நாள் ஒரு துளிக் கண்ணீர்

உன் மேலான மையலை மெருகேற்றியது

உண்பதற்கு ஒரு பருக்கை இல்லாத நாளில்

ஆரத் தழுவி உறைந்து போனது நிகழ்ந்தது

இப்போது எல்லாம் இருக்கிறது

உள்ளாடைகளிலிருந்து உண்ணும் தட்டிலிருந்து

பேழை நிறைய ஆபரணங்கள் வரை

மையலைத் தூண்ட ஏதுமில்லாத

மாளிகையில் நீயும் நானும்

உண்டு உண்டு உறங்குகிறோம்

உறங்கி உறங்கி உண்கிறோம்

நம்மை ஆதர்ஷ தம்பதிகளாய்ப்

பலர் நினைத்துக் கொள்கிறார்கள்

ஆதர்ஷமாய்த் தழுவிய பழைய நாட்களை

வைத்துக் கொண்டு

புதிய நாட்களை கடந்து கொண்டிருக்கிறோம்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...