22 Feb 2023

புத்தரின் சந்திப்பு

புத்தரின் சந்திப்பு

யசோதரை உட்பட

எல்லாரிடமும் சொல்லிச் சென்ற புத்தரை

கவிஞர்கள் எவரும் மதிக்கவில்லை

மனைவியிடம் சொல்லாது

இன்னொருத்தியுடன் ஓடிச் சென்ற கவிஞரைப்

புத்தர் சந்தித்த போது

மதிக்கவே செய்தார்

உங்களது வீடுபேறு எப்படி என்று விசாரிக்கவே செய்தார்

முடிவில்

உங்கள் வீடுபேறும்

எங்கள் வீடுபேறும்

வேறு வேறு என்றபடி

புன்னகைத்துக் கொண்டே விடை பெற்றுக் கொண்டார்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...