14 Sept 2022

பேருந்தில் சந்திப்போம்


பேருந்தில் சந்திப்போம்

கடந்த நான்கு வருடங்களாய்

பேருந்தில் பார்த்துக் கொள்கிறோம்

வீட்டில் வந்து பார்ப்பதை விட

எவ்வளவு வசதி இதில்

என்னைத் தேடி நீ வர வேண்டியதில்லை

உன்னைத் தேடி நான் வர வேண்டியதில்லை

இருவரும் பேருந்தைத் தேடி வந்தால் போதும்

பேருந்து இருவரையும் பார்க்க வைத்து விடும்

இருவருக்கும் பாஸ் இருப்பதால்

உனக்கு நானும் எனக்கு நீயும்

டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை

எவ்வளவு சௌகரியம் செய்கிறது இந்தப் பேருந்து

இன்றென்ன தயிர் சாதமா

நீங்களென்ன புளி சாதமா என்று

விசாரித்துக் கொள்விதல் எவ்வளவு ஆனந்தம்

பிறகு நீயும் அலுவலகம் சென்று விடுகிறாய்

நானும் அலுவலகம் சென்று விடுகிறேன்

பத்திரமாக வந்து விட்டதாக உன் வீட்டார்க்கு

தொலை பேசுகிறாய்

பத்திரமாக வந்து விட்டதாக என் வீட்டார்க்கு

நானும் தொலை பேசுகிறேன்

சாயுங்காலம் வீடு திரும்புகையில்

கேண்டினில் நீ சாப்பிட்ட சமோசா பற்றிச் சொல்கிறாய்

நான் தயிர் வடை சாப்பிட்டதைச் சொல்கிறேன்

மறுநாள் இருவரும் பேருந்தில் சந்தித்தால்

புரிந்து கொள்கிறேன்

வீட்டிலிருந்து பத்திரமாக நீ பேருந்து ஏறுகிறாய்

நானும்தான்

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...