14 Sept 2022

இரண்டு பொண்டாட்டிக்காரர்கள்

இரண்டு பொண்டாட்டிக்காரர்கள்

வேலைதான் முதல் மனைவி என்கிறார்கள்

இரண்டு பொண்டாட்டிக்காரர்கள்

வேறு வழியின்றி சகித்துக் கொள்கிறார்கள்

இரண்டாம் மனைவியாக வாழ்க்கை பட்டவர்கள்

முதல் மனைவி பேசுவதில்லை என்பதால்

சக்களத்திச் சண்டையில்லாமல்

பொழுது போகிறது இரண்டாம் மனைவிக்கு

முதல் மனைவிக்குப் பகலையும்

இரண்டாம் மனைவிக்கு இரவையும்

பிரித்துக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்

இரு மனைவிகளையும் சாமர்த்தியமாகக் சமாளிப்பவர்கள்

முதல் மனைவியை எங்கும் வெளியில்

கூட்டிச் செல்வதுண்டா என்றால்

அடப் போங்கள் சார் என்று சிரிக்கிறார்கள்

அவரிடம் இரண்டாம் மனைவியை

எங்கே அழைத்துச் செல்வீர்கள் என்று

எதற்குக் கேட்க வேண்டும்

இரண்டாவதாக வாக்கப்பட்ட மனைவி

ஒரு நாளாவது இவரிடம் சொல்ல வேண்டும்

முதல் கணவன் வீட்டு வேலை

இரண்டாம் கணவன்தான் நீங்கள் என்று

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...