15 Sept 2022

வருடா வருடம் பிறந்த நாள்

வருடா வருடம் பிறந்த நாள்

திடீரெனப் பிறந்த நாள் என்கிறாய்

வெறும் வாழ்த்துகளை மட்டும் எப்படிச் சொல்வது

பத்து இருபது பலூன்களை உடைத்தாக வேண்டும்

முகத்தில் பூச கேக் வாங்க வேண்டும்

வருவோர் தலையில் கொட்டி அனுப்புவதற்கு

ஜிகினா தாள்களை வெட்டிச்  சேர்க்க வேண்டும்

பழைய சோப்பு டப்பாக்களை

கிப்டாக வாங்கி வருவோர்க்கு

மீந்து கிடக்கும் சேமியாவில் கிச்சடியும்

பாதித் துருவி பாதி துருவாமல் கிடக்கும்

தேங்காயில் சட்டினியில் செய்தாக வேண்டும்

கேட்காமலேயே புத்தாடை வாங்கியிருப்பாய்

சல்லிசாகவாவது சாக்லேட் வாங்க மறந்திருப்பாய்

இந்த இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்

நள்ளிரவில் பிறந்தேன் என்பாய்

நீயே பார்

வருடத்திற்கு ஒரு முறை இப்படி செய்தாக வேண்டியிருக்கிறது

வருவோர் போவோரிடம்

உன் முப்பத்து இரண்டாவது பிறந்த நாளை

இருபத்து மூன்று என்று வேறு சொல்ல வேண்டியிருக்கிறது

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...