30 Dec 2021

கால வெளியில் இயங்கிக் கொண்டிருப்பவை

கால வெளியில் இயங்கிக் கொண்டிருப்பவை

ஒன்று மாற்றி ஒன்று நிகழ்கிறது

நடக்காது என்று எதுவும் இல்லை

முடியாது என்பதும் எதுவும் இல்லை

இறுகிப் போய் விடும் எண்ணங்களை

இளக்கு விடுவதே காலத்தின் வேலை

செய்ய செய்ய ஏதோ ஒன்று

நிகழ்ந்து கொண்டிருக்கிறது

அசையாமல் இருப்பவர்கள்

பூமி நின்று விட்டது என்று கூறலாம்

ஓடுவது நின்றால் சவமாகி விடுவது நிச்சயம்

சுழல்வது நின்றால் தூக்கி எறியப்படுவது நிச்சயம்

கவனிப்பதை விசாலப்படுத்தினால்

எல்லாம் ஏதோ ஒரு விதத்தில்

இயங்கிக் கொண்டிருப்பது அறிய வரலாம்

நின்றபடி இருக்கும் கல்வெட்டுகள்

காலவெளிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன

புதையுண்டு விட்ட அணுக்கள்

உரமாகி முளைத்து எழுகின்றன

கண்களுக்குப் புலப்படா விட்டாலும்

உலகம் சுழன்று கொண்டிருக்கிறது

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...