2 Dec 2021

தேவமலரின் ரகசியம்

தேவமலரின் ரகசியம்

ஒரு தேவமலரின் ரகசியம் ஒளிந்திருக்கிறது உன்னிடம்

தேவ மலரின் ரகசியம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்

வண்ணத்துப் பூச்சியைச் சிறகடிக்க வைக்கிறது

புல்லி வட்டத்தைப் பசுமையாக்கி

அல்லி வட்டத்தில் வண்ணத்தைத் தூவி இறைக்கிறது

ஆண் மலரா பெண் மலரா இரண்டும் கலந்ததா

இரண்டும் இல்லாததா என்பதைத் தீர்மானிக்கிறது

காயாகிக் கனிந்து விதையாகும் பூவினின்று

ஆயிரம் லட்சம் கோடி பூக்கள் பிரசவிக்கின்றன

பறித்துத் தலையில் சூடும்

அடிமையாக்கப்பட்ட ஒரு மலரினின்று

ரகசியம் சருகாகி உதிர்ந்து காலில் மிதிபடுகிறது

நீ அறியாத ரகசியப் புத்தகம் ஒன்றில்

அழகான மலர்கள் பறிக்கப்பட்டு அழிக்கப்படும் என்ற

தேவ ரசியம் பொறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை

அறியச் சொல்ல வந்தவரை நோக்கி

அதனாலென்ன மலர்தலும் பறித்தலும்

நின்று விடவாப் போகிறது எனப் புன்னகைக்கிறாய்

தேவ மலரின் ரகசியத்தை ஊரறியச் செய்வதைப் போல நீ

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...