1 Dec 2021

சபிக்கும் முன் மன்னியுங்கள்

சபிக்கும் முன் மன்னியுங்கள்

உப்பு பொம்மையை நீரில் குளிப்பாட்டுகிறார்கள்

கரைந்து விடும் என்ற கதறலைப் பொருட்படுத்தாமல்

ஊற்றும் நீரைப் பிரவாகமாய்ப் பெருக வைக்கிறார்கள்

மாவு பொம்மைக்கு வியர்க்கும் என்று காற்றில் வைக்கிறார்கள்

மறைந்து விடும் என்ற கேவலைப் பொருட்படுத்தாமல்

காற்றின் வேகத்தை அதிகபடுத்துகிறார்கள்

நீராட்டலும் காற்றோட்டமும் நல்லதுதானே என்கிறார்கள்

தண்ணீரில் இருக்கும் மீனுக்குத்

தரையில் மாளிகைக் கட்டித் தருவதில்

என்ன பிழை இருக்கிறது என்கிறார்கள்

வெற்றிடத்தில் ஓசை பரவுமா என்கிறார்கள்

பிழையென்ன இருக்கிறது திராவகம் படும் போது குளிரும் என்றால்

அழிந்த பின் எல்லாம் ஒன்றே

அழிவதற்கு முன் வேறுபட்டிருக்க வேண்டியதாக இருக்கிறதன்றே

உப்பு பொம்மையை நீரினின்று விலக்கி

விலக்கிய நீரில் மீனை விடுங்கள்

காற்றினின்று மாவு பொம்மையை விலக்கி

காற்றினூடே ஒலிக்கும் உண்மைகளைக் கேளுங்கள்

கடைசியாக அறிவுரையில் முடிந்த கவிதைக்காக

எழுதியவனைச் சபிக்கும் முன் மன்னியுங்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...