வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம்
கருத்து
வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது
அவ்வளவு
எளிதான செயலன்று
ஒவ்வொருவருக்கும்
அவர்கள் கொண்டுள்ள
கருத்துகளே
புரியக் கூடும்
அதைத்
தாண்டிப் புரிந்து கொள்வது அவர்களுக்கு ஒரு சவால்
அவர்களுக்கு
ஓர் இயலாமை
ஆசைக்கேற்ப
விரும்பும் கருத்துகளை
யாரை
விரும்புகிறோமோ
அவர்களும்
புரிந்து கொள்ள வேண்டும்
என்று
எதிர்பார்க்கலாம்
பிரச்சனையை
அங்கிருந்து துவக்கலாம்
விரும்புவதால்
மட்டுமே
விரும்பும்
கருத்துகளை
அவர்களும்
புரிந்து கொள்ள வேண்டும்
என்று
எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது
அவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்
என்று
எதிர்பார்ப்பதை விட
கருத்துகளை
அவர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையை
புரிந்து
கொள்ள முற்பட்டால்
அவர்
மீது நமக்கோ
நம்
மீது அவருக்கோ
விரோதம்
பாராட்டாமல்
ஒரு
நல்ல நட்பு அல்லது உறவு சாத்தியம்
பள்ளமான
இடத்தை நோக்கி தண்ணீர் பாய்வதைப் போல
மனப்
போக்கிற்கு ஏற்பவே பேசவும் செயல்படவும்
செய்பவர்கள்
அநேகம்
எதுவும்
அவர்களது பிழையன்று
மனப்போக்கின்
இயல்புகள் பிழைகள்
மாற்றிக்
கொள்வது என்பது
அவரவர்க்கே
சாத்தியம்
புரிய
வைக்க நினைப்பது பகைமையை உருவாக்கலாம்
மென்மையாக
எடுத்துச் சொல்வதோடு
நிறுத்திக்
கொண்டிருக்கலாம்
வன்மையாக
வலியுறுத்த நினைப்பது
மன
விரோதத்தை சிருஷ்டிக்கலாம்
இதையெல்லாம்
நன்கு புரிந்து கொண்டவர்கள் கூட
மாற்றி
விட முடியும் நம்பிக்கையில்
நம்பிக்கை
இழப்பதான மிச்சத்தை அடைய நேரிடலாம்
இறுதியில்
நிகழ்வதை எவர் மாற்ற இயலும்
யாரை
மாற்றி இங்கு என்னவாகும்
அவர்கள்
மாறித்தான் என்னவாகும்
பொதுவான
நோக்கத்தை
எல்லாராலும்
உணர்ந்து கொள்ள முடியாது
குறுகிய
பார்வை அப்படிப்பட்டது
விரிந்த
வானத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் நிறைய பேர்
அது
அவர்களுக்குப் பயன்படும் என்பதை
அவர்கள்
நம்ப மாட்டார்கள்
பிரசங்கிப்பதும்
வலியுறுத்துவதும்
எதிர்மறையான
விளைவுகளை உருவாக்கலாம்
அவ்வளவு
மோசமான எதிர்மறையான மனநிலைக்கு
எவரும்
எப்படியும் வருவது நிகழலாம்
அளவுக்கு
அதிகமாக தம் மேல்
நிகழ்த்திக்
கொள்ளும் வன்முறையும்
பிறர்
மேல் நிகழ்த்தும் வன்முறையும்
எதற்கும்
காரணமாகலாம்
நழுவிச்
சென்றிருக்க வேண்டியதை
உரசிச்
சென்றாகி விட்ட பின்
அடைவதற்குள்
ஆயிரம் மன உளைச்சல்கள்
எதுவும்
சொல்லும் தரமன்று
எதிலும்
உள்ள எளிமையான விசயம்
நிகழும்
போது நிகழும்
மெத்தனத்துக்கும்
அலட்சியத்துக்கும்
வன்முறைகள்
பதிலாக யாரும் காரணமாக வேண்டாம்
ஆசைப்படுவதன்
பிரச்சனைகள் எல்லாம் விளையாட்டுகள்
விளையாட்டு
எனில் தொடரலாம்
அல்லால்
விட்டு விடலாம்
*****
No comments:
Post a Comment