22 Apr 2021

நம்புவதற்கு நாள்கள் ஆகும்

நம்புவதற்கு நாள்கள் ஆகும்

ஒன்றைச் சிந்தியுங்கள்

அதை உங்களால் செய்ய முடிகிறதா

அவ்வளவு தடைகளை உருவாக்குவார்கள்

அவர்களிடம் அவைகளைச் சொல்லித்தான் ஆக வேண்டும்

சொல்லாமல் இருப்பது சிரமம் மற்றும் சாத்தியமற்றது

மனித வாழ்க்கைக்கு இவ்வளவு எல்லாம் தேவையேயில்லை

யார் கேட்பார்கள்

ஆசைபடுவதும் துன்பத்தை அனுபவிப்பதும்

பழகி விட்ட போதை வஸ்து

அவரவர் மனதை அவரவர் கோணத்தில்

திருப்தி செய்த கோணல்காரர்கள்

கோமாளி வேஷம் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்

விண்ணப்ப கவலைகள் ஓராயிரம்

படாத பாடு படுவதை நினைக்கும் போது வேதனை

இப்படி ஏன் வருத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்

அதில் நிச்சயமற்ற தன்மை நிச்சயம் இருக்கும்

எதுவும் நடக்கும் மனநிலையை இழந்து விடுவீர்கள்

நம்பிக்கையற்ற மனநிலையில் இருப்பதால்

எல்லாமும் எதிர்மறையாகவே தோன்றும்

கோபம் விரக்தி எரிச்சல் மன உளைச்சல்

எது பிடித்ததோ அந்த கேக்கை எடுத்து உண்ணத் தொடங்குங்கள்

சில நேரங்களில் யோசித்த படியே உட்கார்ந்து விடுங்கள்

யோசனை முழுவதும் எதிர்மறை விஷமாகும் போது

சிந்தனை துடிதுடித்துச் சாவதை கண்டு ரசியுங்கள்

 நிகழ்பவை எல்லாம் கடுமையான மனநிலை பாதிப்புகளை

ஏற்படுத்த அனுமதியுங்கள்

மனநல மருத்துவமனைக்கு ஒரு டோக்கன் ரிசர்வ் செய்யுங்கள்

எதையும் சொல்ல முடியவில்லை என்பது புரிகிறது

எல்லாவற்றையும் குழப்பி விட்டு

நன்றாக நடப்பதையும் நடக்க விடாமல் செய்து விடுபவர்கள்

வந்து ஒப்பாரி வைப்பார்கள்

அவர்களிடம் எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது

என்று நினைக்கலாம்

மறுபடியும் வேலை அவர்களிடமே செல்லலாம்

அவர்களை நம்பி காரியத்தில் இறங்கி

சின்னாபின்னமாக நீங்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம்

அலங்கமலங்க அடிக்கப்படுவதை எப்படித் தடுப்பீர்கள்

வாங்குவதோ விற்பதோ ஒரு பிரச்சனை இல்லை

அரை மெண்டல்களிடம் என்ன வியாபாரம் செய்வீர்கள்

உங்கள் எழுத்துகள் புரியாத லிபியில் போய்க் கொண்டிருக்கும்

எல்லாம் ஒரு விளையாட்டுதான் என்று தெளிந்தால் தப்பிப்பீர்கள்

எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது

என்று நினைப்பது பெரிதில்லை

அதுவும் நல்ல ஒரு மனநிலைதான்

ஆனால் அப்படி இருக்க முடியுமா என்ன

மனம் அடிக்கடி மாறி விடும்

நிலைமை எப்போதும் சிக்கல்தான்

இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்தால் லாபம்

நீங்கள் அவசரப்படுத்தப்படுவீர்கள்

பின்னுக்கு இழுக்கும் ஒரு வேலையைச் செய்ய

ஒரு கூட்டமே காத்திருக்கிறது

திரும்ப திரும்ப நிராகரிப்புக்கு உள்ளாவீர்கள்

அது குறித்து முறைப்படி கேள்வி எழுப்ப வேண்டும் முடியுமா

உங்களுக்கு வாய்த்தது எதை எதிர்பார்க்கிறது என்பதைப் புரிவதற்குள்

காலம் கடந்து விடும் ஐயோ பாவம் நீங்கள்

ஒரு விதத்தில் யோசித்துப் பார்த்தால்

எதுவும் தவறாகச் செல்லவில்லை

எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது

ஆனால்  மாற்ற நினைப்பதால் பிரச்சனை ஆகிறது என்று புலம்ப முடியுமா

இந்த உலகத்தில் எந்த மனிதரை மாற்ற முடியும்

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை கல்லூளிமங்கர்கள்.

ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால்

மனதை நியாயப்படுத்திக் கொள்வது

அது அவ்வளவு மலிவானதா

அவர்கள் அப்படித்தான்

ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரகத்திலிருந்து வந்தவர்கள்

யாரிடமும் எந்தவித நியாயத்தையும் எதிர்பார்க்க மாட்டீர்கள்

மனிதர்களிடம் ஒரு நியாயத்தை எதிர்பார்ப்பது

மன உளைச்சல் என்றால் நம்புவதற்கு நாளாகும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...